இளையராஜா விழா: செலவு கணக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை நாளை மறுநாள் தாக்கல் செய்ய தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை தவறாக பயன்படுத்துவதாக தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவுக்கு  ரூ.3.5 கோடி கொடுப்பதற்கு முறைப்படி ஒப்பந்தம் செய்யவில்லை எனவும், நிகழ்ச்சிக்காக சேகரிக்கப்பட்ட நன்கொடை நிதி விபரத்தை சங்கம் தாக்கல் செய்யவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சங்க நிதி மற்றும் செலவுக்கணக்கு விவரத்தை தாக்கல் செய்தால் விழா நடத்த ஆட்சேபமில்லை எனவும் குறிப்பிடப்பட்டது. 

தொடர்ந்து, பிப்.2,3 தேதிகளில் இளைராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், இளையராஜா பாராட்டு விழாவை ஏன் ஒத்திவைக்க கூடாது என கேள்வி எழுப்பியதோடு, இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை நாளை மறுநாள் தாக்கல் செய்ய வேண்டும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு உத்தரவிட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP