அன்றே ஒதுக்கிய இளையராஜா... #MeToo புகாரால் கழற்றிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்... பரிதாபத்தில் வைரமுத்து!

1986-ம் ஆண்டு வெளியான ’இசை பாடும் தென்றல்’ இளையராஜா இசையில் வைரமுத்து பாட்டெழுதிய கடைசிப்படம். ’மீ டூ’ விவகாரத்தால் ஏ.ஆர்.ரஹ்மானும் இனி வாய்ப்பு தரமாட்டார் என்பதால் வைரமுத்து கலக்கத்தில் உள்ளார்.
 | 

அன்றே ஒதுக்கிய இளையராஜா... #MeToo புகாரால் கழற்றிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்... பரிதாபத்தில் வைரமுத்து!

1986-ம் ஆண்டு வெளியான ’இசை பாடும் தென்றல்’ இளையராஜா இசையில் வைரமுத்து பாட்டெழுதிய கடைசி திரைப்படம். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இன்று வரை அவர்கள் இருவரும் இணையவில்லை. ’மீ டூ’ விவகாரத்தால் ஏ.ஆர்.ரஹ்மானும் இனி வாய்ப்பு தரமாட்டார் என்பதால் வைரமுத்து கலக்கத்தில் உள்ளார்.

அன்றே ஒதுக்கிய இளையராஜா... #MeToo புகாரால் கழற்றிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்... பரிதாபத்தில் வைரமுத்து!

1992-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் ரோஜா. முதல் படத்திலேயே இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். வைரமுத்து வரிகளில் அவர் இசையமைத்த பல பாடல்கள் தேசிய விருதை பெற்றுத் தந்திருக்கின்றன. அப்போது முதல் ஆஸ்தான பாடலாசிரியராக வைரமுத்துவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழில் அனேகமாக வைரமுத்து வரிகளில் உருவான பாடல்களுக்கே அதிகமாக இசையமைத்திருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிலையில், ’மீ டூ’ விவகாரத்தில் சின்மயி பாலியல் புகாரளித்துள்ளதால் வைரமுத்து மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 

பொதுவாக சர்ச்சையில் சிக்கிய எவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்குவதை தவிர்த்து விடுவது ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கம். அதுவும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் வாய்ப்பு வாங்கித் தருவதாக சில பெண்களிடம் வைரமுத்து வலைவிரித்திருப்பதாகக் கூறப்படுவது ஏ.ஆர்.ரஹ்மானை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. வைரமுத்து தன் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க ரஹ்மானை செல்போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோதும் அதனை தவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆக, இனிவரும் காலங்களில் இருவரும் இணைந்து பணிபுரிவது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏற்கெனவே மெர்சல், சர்கார் போன்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்களில் வைரமுத்து தவிர்த்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கத் தொடங்கி இருக்கிறார்.   

அன்றே ஒதுக்கிய இளையராஜா... #MeToo புகாரால் கழற்றிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்... பரிதாபத்தில் வைரமுத்து!

திரைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் வைரமுத்து இணைந்து ஓடுகிறார்கள் என்றால், அதற்கு முன்பே தவழ, நடக்க, ஓட களம் அமைத்துக் கொடுத்தவர் இளையராஜா.1980-ம் ஆண்டு வெளியான இது ஒரு பொன் மாலைப் பொழுது... என திரையுலகில் வழிகாட்டினார் இளையராஜா. அடுத்தடுத்து இசையுலகில் இவர்கள் கடந்து தூரம் அலாதியானது. ஆனாலும், 1986ம் ஆண்டு வெளியான இசை பாடும் தென்றல் திரைப்படமே இவர்கள் இணைந்து பணியாற்றியதில் கடைசிப்படமாக அமைந்தது. அடுத்து பிற இசையமைப்பாளர்களின் படங்களில் மட்டுமே பாடல்கள் எழுதி வந்தார். இப்போது 32 ஆண்டுகள் கடந்தும் இளையராஜாவும், வைரமுத்துவும் படங்களில் இணைந்து பணியாற்றுவதும் இல்லை. பேசிக்கொள்வதும் இல்லை. 

அன்றே ஒதுக்கிய இளையராஜா... #MeToo புகாரால் கழற்றிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்... பரிதாபத்தில் வைரமுத்து!

ஏற்கெனவே இளம் பாடலாசிரியர்கள் வைரமுத்து மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இளம் இசையமைப்பாளர்களும் இனி வாய்ப்பு கொடுக்க முன் வர மாட்டார்கள். ஆகையால், ஏழு முறை தேசிய விருதுகளை பெற்ற கவிப்பேரரசின் திரையுலக வாழ்க்கை பாலியல் புகாரால் முடக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP