’ஒரே அறையில் தங்கினால் முதலிரவா..?’ வைரமுத்துவை வெறுத்த இளையராஜா... வெளியான பகீர் பின்னணி!

“எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது” பாடல் வரியை இளையராஜாவிடம் காட்ட, அவர் “பாட்டா இது, உரைநடை எழுதியிருக்க?” என்று கோபப்பட அந்த அறையில் இருந்து உடனடியாக வெளியேறி விட்டார் வைரமுத்து.
 | 

’ஒரே அறையில் தங்கினால் முதலிரவா..?’ வைரமுத்துவை வெறுத்த இளையராஜா... வெளியான பகீர் பின்னணி!

1980-ல் நிழல்கள் படத்தில் இளையராஜாவின் ராகத்தில் ’இது ஒரு பொன் மாலை பொழுது...’ இசை மழை பொழிய ஆரம்பித்தனர். எத்தனையோ பாடல்கள்... அத்தனையும் ரசிகர்களின் தேடலாய் அமைந்தன. 1986-ல் ’இசை பாடும் தென்றல்’ படத்தில் ’எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது?’ என்கிற பாடலில் இருவரும் நட்பை கைக்குள் இருக்கும் கர்சீப்பாய் நட்பை கசக்கிச் சுருட்டிக் கொண்டனர். 

இதுவரை இவர்களது பிரிவுக்கான காரணத்தை இருவருமே வெளிப்படுத்தியதில்லை. சரி... ஏன் இந்தப்பிரிவு? பொன்மாலை பொழுது பாடலில்ன் ஆரம்பித்து இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடல்கள் எழுதி வந்தார் வைரமுத்து. இந்த இசைப் பயணத்தில் இருவருக்குமிடையே விரிசல் விழத்தொடங்கியது. வைரமுத்து பிற இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் அப்போதுதான் அதிகமாக எழுத்தொடங்கி இருந்தார். அதுவரை ஒலிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வந்து தேவைப்பட்ட நேரத்தில் பாடல்வரிகளின் திருத்தத்திற்கு பெரும் உதவியாக இருந்த வைரமுத்துவால், அடுத்து சரியாக ஒலிப்பதிவிற்கு வரமுடியாமல் போக, உரசல் உண்டாகி அது நாளடைவில் ஒருவரை ஒருவர் சமயம் கிடைக்கும் போது தாக்கிக்கொள்ளும் அளவிற்கு பெரியதாகியது.

’ஒரே அறையில் தங்கினால் முதலிரவா..?’ வைரமுத்துவை வெறுத்த இளையராஜா... வெளியான பகீர் பின்னணி!

அடுத்ததாக பாடல் வரிகளில் இளையராஜா தலையிட்டு மாற்றச்சொல்வது; அந்த விரிசலை மேலும் பெரியதாக்கியது. உதாரணமாக ’சிந்து பைரவியில்’ வைரமுத்து எழுதிய பல்லவியை மாற்றிவிட்டு கிராமிய பாடலில் இருந்து இளையராஜா எடுத்து போட்ட பல்லவிதான் “பாடறியேன் படிப்பறியேன்”. இந்த கிராமிய பாடலின் பல்லவியை “புதிய வார்ப்புகள்” படத்திலும் நாம் கேட்கலாம். விரிசல் பெரிதாக பெரிதாக ஒருவரது பலவீனத்தை இன்னொருவர் இனம் கண்டு தாக்க, அது மனஸ்தாபமாய் உருவெடுத்தது. உதாரணமாக வைரமுத்துவிற்கு எப்போதுமே ஒரு படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் தானே எழுதவேண்டும் (படத்தின் கேஸட்/ரெக்கார்டில் போட்டோ, டைட்டில் கார்டு, போஸ்டர் விளம்பரத்தில் தனித்து தெரிவது) என்பது விருப்பமாய் இருக்கும். இதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார்.

’ஒரே அறையில் தங்கினால் முதலிரவா..?’ வைரமுத்துவை வெறுத்த இளையராஜா... வெளியான பகீர் பின்னணி!

இந்த சூழலில் தாய்க்கொரு தாலாட்டு படத்திற்கு முழுப்பாடலையும் எழுத வைரமுத்து ஒப்பந்தமாகிறார். பாடல்கள் எல்லாம் ஒலிப்பதிவாகி படமாக்கப்பட்ட பின்னர்; ரீ-ரெக்கார்டிங்கின் போது மேலும், ஒரு பாடலை சேர்த்து அதை கவிஞர் வாலியை வைத்து எழுதச்சொல்லி; பாடல்கள் – வைரமுத்து என்ற டைட்டில் கார்டை பாடல்கள் – வாலி-வைரமுத்து (ஒரு பாட்டு எழுதினாலும் வாலி சீனியர் ஆச்சே வாலி பெயர்தானே முதலில் வரவேண்டும்) என்று மாற்றுகிறார் இளையராஜா. இளையராஜா இவ்வாறு நடந்து கொள்ள என்ன காரணம்? இந்த படத்தின் பாடல் கம்போஸிங்கின் போது “இளமைக்காலம் – என்ற புதியபறவை” பாடல் ரீமிக்ஸின் வரிகளில் “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று வரிகளில் வைரமுத்து வார்த்தை ஜாலம் புரிந்து இளையராஜாவை கோபப்படுத்தியதே காரணம்.

இதே போல்தான் சிந்துபைரவி டைட்டில் கார்டிலும் பிரச்சனை. “தென்றலது கண்டதுண்டு திங்களது கண்டதில்லை, மனம்தான் பார்வை” என்ற வாலி எழுதிய இரண்டு வரிகளுக்காக, வாலியின் பெயரை தியாகராஜ சுவாமிகள், பாரதியார், ஆகியோருடன் சேர்த்து ஒரு டைட்டில் கார்டுடாகவும், பாடல்கள் – வைரமுத்து என்று வைரமுத்துவிற்கு தனி டைட்டில் கார்டு போட்டு பிரச்சனையை பாலச்சந்தர் சமாளித்திருப்பார்.
கடைசியாக இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாள் “இசை பாடும் தென்றல்” படப்பாடல் கம்போஸிங்கின் போது மோதலாக வெடித்தது. “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது” பாடலுக்கு வரியை எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, “என்னய்யா பாட்டு எழுதச்சொன்னா, உரைநடை எழுதியிருக்க? இப்ப பாரு நான் எழுதுறேன்” என்று தான் எழுதிய பாடலை இளையராஜா, வைரமுத்துவிடம் காண்பிக்க, வைரமுத்து “prose மாதிரி இருக்கு” என்று கூறிவிட்டு கோபமாக அந்த அறையில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டார். அதன் பின்னர் எத்தனையோ போர் எவ்வளோவிதமாக சமாதானம் செய்தும் பலனேதும் இல்லை.

’ஒரே அறையில் தங்கினால் முதலிரவா..?’ வைரமுத்துவை வெறுத்த இளையராஜா... வெளியான பகீர் பின்னணி!

இளையராஜாவுடன்  உங்கள் கூட்டணி இனிமேல் சாத்தியமா? என வைரமுத்துவிடம் ஒரு முறை கேட்டபோது, ’’நீண்ட ஆண்டுகளாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என் மௌனமே பதிலாக இருந்தது. இன்று அந்தப் போலி மௌனத்தின் பூட்டை உடைக்கிறேன்.
பாரதிராஜா – இளையராஜா இருவரும் தமிழ் சினிமாவில் தடம் சமைத்தவர்கள்; தத்தம் துறையில் தலைமை பூண்டவர்கள். அவர்கள் பெற்ற வெற்றியில்தான் நான் ஒட்டிக்கொண்டேனே தவிர, என்னால் அவர்கள் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், என் வருகைக்கு முன்னும் பிரிவுக்குப் பின்னும் வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.

பிரிந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய முடியுமா என்கிறீர்கள். ஆனால், ஒரு தலைமுறை கடந்துவிட்டது. சமூகம் இடம்பெயர்ந்துவிட்டது. சரக்கு உன்னதமாக இருந்தாலும் சந்தையின் தேவை மாறிவிட்டது. இப்போது இணைந்தால் பழைய பாணி எடுபடுமா? அறுபதாம் கல்யாணத்துக்குப் பிறகும் தம்பதிகள் ஒரே அறையில் தங்கலாம். அதற்குப் பெயர் முதலிரவா?

’ஒரே அறையில் தங்கினால் முதலிரவா..?’ வைரமுத்துவை வெறுத்த இளையராஜா... வெளியான பகீர் பின்னணி!

வாத்தியங்களில் இருந்த இசை தொழில்நுட்பத்துக்குத் தாவிவிட்டது. மீண்டும் பழைய பாணியில் பாடல்கள் அமைத்தால் நவீனமாக இல்லை என்பார்கள். நவீனமாக இசையமைத்தால் பழைய பாடல் போல் இல்லை என்பார்கள். ஆகவே, எங்களின் பழைய பாடல்களை ரசித்துக்கொண்டிருப்பதுதான் ரசிகனுக்கு விஷப்பரீட்சை இல்லாத விருந்தாக இருக்கும். எனவே, நாங்கள் இணைவது என்றாவது சாத்தியமாக இருக்கலாம்; இயங்குவது சாத்தியமாக இருக்குமா?” எனத் தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கும் திடத்தில் இப்படி வைரமுத்து பேசுகிறார் என்றார்கள் அப்போது. ஏ.ஆர்.ரஹ்மானும் கைவிட்ட பிறகு என்னவாகுமோ கவிப்பேரரசரின் நிலை..?

’இது ஒரு பொன்மாலை பொழுது...’ என மகிழிசையோடு தொடங்கிய வைரமுத்துவின் வரிகளில் இறுதியாய் செக்க சிவந்த வானம் படத்தில் அவர் எழுதிய வரிகள் என்ன தெரியுமா..? ’
’எங்கே எங்கே வீழ்வோம் என்றே அறியா மழைத்துளிகள்
விதைமேல் ஒன்றாய், சிதைமேல் ஒன்றாய் வீழ்வதே பிராப்தம்
விதி வேட்கையே பிராப்தம் - பிராப்தம் சூழ்கிறதே
இதயமற்ற காலமே உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே! வாழ்வையே உதிரம் சூழ்கிறதே...!’’

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP