சங்கரதாஸ் அணி வென்றால் சொந்த பணத்தில் சங்க கட்டிடம் கட்டுவோம்:

செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் உதயா, சங்கரதாஸ் அணி வென்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் பணம் திரட்டிடாமல் , 8 மாதத்துக்குள் எங்களது சொந்த பணத்தில் சங்க கட்டடம் கட்டி முடிப்போம் எனத் தெரிவித்துள்ளார்
 | 

சங்கரதாஸ் அணி வென்றால் சொந்த பணத்தில் சங்க கட்டிடம் கட்டுவோம்:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ஒட்டி, மதுரையில் உள்ள நாடக நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் சுவாமி சங்கரதாஸ் அணியினரான  நடிகர் உதயா,நடிகர் விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகியோர்  ஆதரவு சேகரித்தனர். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் உதயா: கருணாஸ் பதவி கேட்டதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆதாரத்தை  வெளியிடுவேன் எனவும் கூறினார், அதோடு நடிகர் சங்க  கட்டடத்தை  விஷால் மட்டும் கட்டவில்லை, எல்லா கலைஞர்களும் இணைந்தே கட்டடப் பணியை மேற்கொண்டார்கள் என்றும், பாண்டவர் அணியினர் பொய் மட்டுமே கூறிவருவருவதாகவும், கருணாஸ் பதவி கேட்டார், உண்மையாய் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி என்று சொன்னாதால் அவர் கோபப்பட்டு பேசி வருகிறார் என தெரிவித்தார்.

மேலும் பேசிய உதயா, சங்கரதாஸ் அணி வென்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதன்  மூலம்  பணம் திரட்டிடாமல் , 8 மாதத்துக்குள் எங்களது சொந்த பணத்தில் சங்க கட்டிடம் கட்டி முடிப்போம் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

newstm.in   

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP