ஐகான் விருது தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம்: கமல்ஹாசன்

ரஜினிக்கு வழங்கப்படும் ஐகான் விருது 43 ஆண்டுக்கு பின் தாமதமாக வழங்கப்படுகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 | 

ஐகான் விருது தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம்: கமல்ஹாசன்

ரஜினிக்கு வழங்கப்படும் ஐகான் விருது 43 ஆண்டுக்கு பின் தாமதமாக வழங்கப்படுகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் பேசிய கமல்ஹாசன், எங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் எங்கள் இருவருக்கும் நாங்கள் தான் முதல் ரசிகன் என்றும் நானும் ரஜினியும் ஒருவரை ஒருவர் விமர்சிப்போம், பாராட்டிக்கொள்வோம் என்றும் தெரிவித்தார். ரஜினிகாந்த திரையுலகிற்கு வந்த முதல் ஆண்டே ஐகான் விருதுக்கு தகுதி பெற்று விட்டதாகவும், தாமதமான கவுரவம் என்றாலும் ரஜினிக்கு தக்க கவுரவமாக ஐகான் விருது அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ரஜியின் உழைப்பு பிரமிக்கத்தக்கது என தெரிவித்த அவர், விருது வழங்குவதுற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என நானும், ரஜினியும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம் என்றும், ரஜினி கையையும், எனது கையையும் யாராலும் பிரிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP