நன்றி கடனுக்காகத்தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தேன்; கண்ணீருடன் கூறிய ஒளிப்பதிவாளர்

நிகழ்ச்சியில் பேசிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன், தன் மனைவி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தபோது உயிரை காப்பாற்றிக்கொடுத்தது டாக்டர் தீரஜ் தான். இவர்கள் இல்லையெனில் என் மனைவி உயிருடன் இருந்திருக்க மட்டாள். இந்த நன்றி கடனுக்காகத்தான் இந்த படத்தில் பணி செய்தேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
 | 

நன்றி கடனுக்காகத்தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தேன்; கண்ணீருடன் கூறிய ஒளிப்பதிவாளர்

சீம ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் தைரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தவர் பாலசுப்ரமணியன். இவர் தற்போது புதுமுக நடிகர் மற்றும் இயக்குனர் கூட்டணியில் உருவாகும்   "போதைஏறி புத்தி மாறி" படத்தின் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இதில் டாக்டர் தீரஜ், மாடல் அழகிகளான துஷாரா, பிரதாயினி ஆகியோர் நடித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வர உள்ள இந்தத் திரைப்படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன்,  தன் மனைவி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தபோது உயிரை காப்பாற்றிக்கொடுத்தது டாக்டர் தீரஜ் என்று தெரிவித்தார்.

மேலும் உதயநிதி, தீரஜ் இருவரும் இரவு முழுவதும் கண் விழித்து என் மனைவியைப் பார்த்துக்கொண்டனர். இவர்கள் இல்லையெனில் என் மனைவி இன்று உயிருடன் இருந்திருக்க மட்டாள். இந்த நன்றி கடனுக்காகத்தான் இந்த படத்தில் பணி செய்தேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP