நான் தந்தை பெயரை வைத்து முன்னேறியவள் அல்ல: சோனம் கபூரை விளாசிய கங்கனா

தான் அளித்த பாலியல் குற்றச்சாட்டை நம்ப முடியாது என்று கூறிய சோனம் கபூரை தாக்கும் விதத்தில், தான் தந்தை பெயரை வைத்து முன்னேறியவள் அல்ல என்ற பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
 | 

நான் தந்தை பெயரை வைத்து முன்னேறியவள் அல்ல: சோனம் கபூரை விளாசிய கங்கனா

தான் அளித்த பாலியல் குற்றச்சாட்டை நம்ப முடியாது என்று கூறிய சோனம் கபூரை தாக்கும் விதத்தில், தான் தந்தை பெயரை வைத்து முன்னேறியவள் அல்ல என்ற பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். 

பாலிவுட்டில் வெளியான குயின் படம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது மூன்று மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய விகாஸ் பாஹல் மீது சமீபத்தில் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். அதற்கு விகாஸ் மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தும் விகாஸ் மீது பாலியல் புகார் கூறினார். இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து நடிகை சோனம் கபூரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர், "கங்கனா நிறைய விஷயங்களை பற்றி பேசுகிறார். அவர் பேசுவதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள முடியாது" என்றார். 

சோனம் கபூரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கங்கனா, "நான் சொல்வதை நம்பக் கூடாது என்று சோனம் கூற காரணம் என்ன?. எனது  #MeToo  கதையை நான் கூறுகிறேன். இதில் என்னை பற்றி முடிவு செய்ய சோனமிற்கு யார் உரிமை கொடுத்தது. சிலர் கூறுவதை,  அவர் நம்புகிறார். வேறு சிலர் கூறுவதை நம்ப மறுக்கிறார். இதற்காக அவர் லைசன்ஸ் வாங்கி வைத்துள்ளார். நான் கூறுவது பொய்தான் என்று கூற அவரிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. நான் பல சர்வதேச கருத்தரங்கங்களில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டவள். அவற்றில் எல்லாம் நான் இளைஞர்களுக்கு முன்னோடியாக அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறேன். எனது தந்தையின் பெயரால் நான் முன்னேறவில்லை. 10 வருட கடின உழைப்பால் முன்னேறி இருக்கிறேன்" என்றார். 

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் நானா பட்னேகர் மீது தனுஶ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்திருந்தபோது அவருக்கு ஆதரவாக பேசியவர்களுள் சோனம் கபூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP