எப்படி உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடிக்காம இருக்கு - பிக்பாஸ் ப்ரோமோ 1

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்தோடு நிறைவுப் பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டு எலிமினேட் ஆனவர்கள் அனைவரும் தினம் வீட்டிற்கு வருகை புரிகிறார்கள். இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
 | 

எப்படி உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடிக்காம இருக்கு - பிக்பாஸ் ப்ரோமோ 1

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்தோடு நிறைவுப் பெறுகிறது. ஏற்கனவே இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டு எலிமினேட் ஆனவர்கள் அனைவரும் தினம் வீட்டிற்கு வருகை புரிகிறார்கள். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 

ஆனந்த் வைத்தியநாதனும், மமதியும் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். 'நல்லா எளச்சிட்டே' என்கிறார் ஆனந்த், ஐஸ்வர்யாவைப் பார்த்து. 

"பாலாஜியோட ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்னமா இருக்கு, என்னடா இந்த ஷோன்னு நெனச்சேன். நீங்களாம் வெளில போகும்போது தெரியப் போகுது, என்ன ஒரு ஃபேன் ஃபாலோயிங்" என்கிறார். 

'தே ஆர் ஆல் பிளஸ்டு' என்கிறார் பாலாஜி.

"ஆத்திரம், ஆவேசம், அழுகை, ஆதங்கம், ஆணவம் எல்லாமே வெளில வந்திருக்கு" என மமதி சொல்ல, "எப்படி உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடிக்காம இருக்கு" எனக் கேட்கிறார் ஆனந்த் வைத்தியநாதன். 

அதற்கு அனைவரும் கோரஸாக சிரிக்கிறார்கள். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP