கனவு கன்னி தமன்னாவிற்கு கைக்கொடுக்கும் ஹாரர் மூவிகள்  

'அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கி வரும் ஹாரர் மூவியில் நடித்து வருகிறார் தமன்னா இந்த படத்திற்கு பெட்ரோமாக்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்ட்டரை நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 | 

கனவு கன்னி தமன்னாவிற்கு கைக்கொடுக்கும் ஹாரர் மூவிகள்  

முன்னணி நடிகையாக வளம் வருபவர் தமன்னா. இவர் கதாநாயகியை நடித்த காதல் படங்களை விட ஹாரர் படங்கள் தான் அதிக வரவேற்பை  பெற்றன என்று சொல்லலாம். இவர் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த தேவி படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதை தொடர்ந்து தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவான ஹாரர் மூவிகளில் நடிக்க துவங்கிவிட்டார் தமன்னா. அதன் படி தற்போது 'அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கி வரும் ஹாரர் மூவியில் நடித்து வருகிறார் தமன்னா

இந்த படத்திற்கு பெட்ரோமாக்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தில் தமன்னாவுடன் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில்  'பெட்ரோமாக்ஸ்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்ட்டரை நடிகை  டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு இந்த படம் வெற்றி பெற திரைதுறையை சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP