தயாரிப்பாளர் கட்டாத வரி... அடாவடி இயக்குநரான ஹரி!

சாமி ஸ்கொயர் படத்தை இயக்க 8 கோடி சம்பளம் வாங்கினார் இயக்குநர் ஹரி. இதற்கான வரியை தயாரிப்பாளர் கட்டாததால் அவரது அலுவலகத்தில் இருந்த கணினி உள்ளிட்டவைகளை இயக்குநர் ஹரி தூக்கி வந்து விட்டார் என்கிறார்கள்
 | 

தயாரிப்பாளர் கட்டாத வரி... அடாவடி இயக்குநரான ஹரி!

எப்போதுமே கறார் பார்ட்டி இயக்குநர் ஹரி. இதற்கு முன் தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் செய்யாத கொடுமையை இயக்குனர் ஹரி செய்திருக்கிறார்.
விக்ரம் நடித்த சாமி ஸ்கொயர் படத்தை தயாரித்து தக்காளி சட்னியாகி விட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ். அந்தப்படத்தை இயக்க சுமார் எட்டு கோடி சம்பளத்தை ஹரிக்கு வழங்கியுள்ளனர்.  அதற்கான டி.டி.எஸ் தொகையையும் கட்டுவதாக ஷிபு தமின்ஸ் கூறியிருந்தாராம். ஆனால் படம் தோல்வி அடைந்ததால் அதனை கட்டவில்லை. இதனால் கடுப்பான ஹரி, நேரடியாக ஷிபு தமின்ஸ் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

தயாரிப்பாளர் கட்டாத வரி... அடாவடி இயக்குநரான ஹரி!அங்கிருந்த கம்ப்யூட்டர், ஐபோன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்து வேனில் ஏற்றியவர், ‘டி.டி.எஸ் சர்டிபிகேட்டை கொடுத்துட்டு பொருளை வாங்கிக்கலாம்’ என்று முழங்கிவிட்டு கிளம்பினாராம். சிங்கம் படத்தில் வரும் சீன் மாதிரியே இருக்கிறதல்லவா? கோடி கோடியாக கொட்டி படம் எடுத்த ஷிபுவுக்கு எள்ளு. படம் இயக்கிய ஹரிக்கு எட்டு கோடி பில்லு! 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP