தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

'நேர்கொண்ட பார்வை படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரபுரவமாக அறிவித்துள்ளது படக்குழு.
 | 

தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் ரீமேக் தான் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ்ஷா.

அதோடு அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8 -ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP