தந்தையின் பிறந்த  நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி!

தனது நண்பரான அருண் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள ’வாழ்’ என்னும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்: வாழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
 | 

தந்தையின் பிறந்த  நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், இவருக்கு இளைஞர் முதல் குழந்தைகள் வரை ரசிகர் பட்டாளம்  அதிகம்.  சிவகார்த்திகேயன் தனது சினிமா துறையில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். அதன் படி இவரின்  SK புரோடக்‌ஷனின் முதல் தயாரிப்பாக பெண்கள் கிரிக்கெட் மற்றும் விவசாயிகளை மையப்படுத்திய ”கனா” திரைப்படம் உருவானது.

அதனை தொடர்ந்து யூ - டி- யூப்  மூலம் பிரபலமான பிளாக்‌ஷிப் என்னும் யூடுப் குரூப்பின் முயற்ச்சிக்கு கைகொடுக்க எண்ணிய சிவகார்த்திகேயன் “ நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா “ என்னும் திரைப்படத்தை தயாரித்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையே பெற்றுக் கொடுத்தது.

 இந்நிலையில் தனது நண்பரான அருண் பிரபு  இயக்கத்தில் உருவாக உள்ள ’வாழ்’ என்னும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.  இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்: தனது தந்தையின் பிறந்தநாளான இன்று  SK புரோடக்‌ஷனின்  மூன்றாவது தயாரிப்பு குறித்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி என்றும், எப்போதும் போல உங்களின் பேரதரவு இந்த படத்திற்கும் வேண்டும் என கருத்திட்டு, வாழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP