கஜா நிவாரண நிதி: ரூ.25 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

கடந்த வாரம் வந்த கஜா புயலால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.25 லட்சத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். மேலும் பல திரையுலகினர் நிவாரண நிதி வழங்கி உள்ளனர்.
 | 

கஜா நிவாரண நிதி: ரூ.25 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் விக்ரம்.

கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் புயல் சீற்றத்தால் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர தமிழ்த்திரையுலகினரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். விஜய், ரஜனி, சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவகுமார், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நிதி வழங்கி உள்ளனர். மேலும் சங்கர், வைரமுத்து உள்ளிட்டோரும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். 

இந்நிலையில் நடிகர் விக்ரம் ரூ.25 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP