ராட்சசனை கைப்பற்றிய முன்னணி சேனல்!

சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது இந்தத் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை முன்னணி தொலைக்காட்சியான, சன் டி.வி வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
 | 

ராட்சசனை கைப்பற்றிய முன்னணி சேனல்!

முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ராட்சசன்'. காமெடி களத்தில் தன்னுடைய முதல் படத்தை இயக்கியிருந்த இவர் சைக்கோ த்ரில்லராக முற்றிலும் மாறுபட்ட களத்தில், ராட்சசனை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுத்து வருகிறது. 

இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் விஷ்ணு, ராமதாஸ், அமலாபால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். கிரிஸ்டோபர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சரவணன் என்பவர் மிரட்டியிருந்தார். இதன் த்ரில்லர் அனுபவமும், விறு விறு திரைக்கதை அமைப்பும் வெகுவாக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

 அதோடு, ராட்சசனை பார்த்த பல பிரபலங்கள் அவர்களின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை முன்னணி தொலைக்காட்சியான, சன் டி.வி வாங்கியிருக்கிறதாம். 

newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP