சங்கர் மகா தேவனைத் தொடர்ந்து, ஜிப்ரானும் தேடிய அந்த நபர்!

விஸ்வரூபம் படத்தில் ரசிகர்களிடம் பிரபலமான பாடல் 'உன்னை காணது' எனத் தொடங்கும் பாடல்.
 | 

சங்கர் மகா தேவனைத் தொடர்ந்து, ஜிப்ரானும் தேடிய அந்த நபர்!

விஸ்வரூபம் படத்தில் ரசிகர்களிடம் பிரபலமான பாடல் 'உன்னை காணது' எனத் தொடங்கும் பாடல். கமல் ஹாஸன் எழுதியிந்த அந்தப் பாடலை, கமலும் ஷங்கர் மகா தேவனும் இணைந்துப் பாடியிருப்பார்கள். தவிர ஷங்கர் மகா தேவனை உள்ளடக்கிய ஷங்கர் - எஸ்ஸான் - லாய் என்ற மூவர் கூட்டணி தான் அந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தது. 

இந்தப் பாடலை தோட்டத்தில் அமர்ந்திருந்த சாதாரண நபர் ஒருவர் மிக அற்புதமாக பாடும் வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 

இதைத் தொடர்ந்து பாடகர் ஷங்கர் மகாதேவன் அந்த நபரைப் பற்றிய தகவல்களை தனக்குத் தருமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்திருந்தார். தவிர, 'இவரை நான் எப்படி கண்டுபிடிப்பது? இவருடன் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பமாக இருக்கிறது. இவரைக் கண்டறிய எனக்கு உதவி தேவை' எனவும் கூறியிருந்தார். 

அதன் பிறகு விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரானும் அந்த வீடியோவை அவரது ட்விட்டரில் பதிவிட்டு 'யாரிடமாவது இவரின் தொடர்பு எண் உள்ளதா' எனக் கேட்டிருந்தார். 

இந்நிலையில் அவரது பெயர் ராகேஷ் உன்னி என்றும் அவரது மொபைல் நம்பரையும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து கமல் ஹாஸன், ராகேஷ் உன்னியை தொடர்பு கொண்டு பாராட்டினாராம். இன்னொரு முக்கியமான விஷயம்... ஜிப்ரான் இசையில் நாளை பாட இருக்கிறாராம் ராகேஷ்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP