வைராலாகும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் அடுத்த பாகத்தின் படம்!

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸின் அடுத்த பாகம் தயாராகிறது. ‘ஹாப்ஸ் அண்ட் ஷா’ என இதன் 9-ம் பாகத்திற்குப் பெயரிடப் பட்டுள்ளது. இதில் நடிகர்கள் ராக்கும், ஜேசன் ஸ்டேதமும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
 | 

வைராலாகும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் அடுத்த பாகத்தின் படம்!

ஃபாஸ்ட் அண்ட் ஃபுயூரியஸ் வரிசைப் படங்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் ஏராளம். அதுவும் அதிரடிகளை ரசிப்பவர்களுக்கு திகட்ட திகட்ட விருந்து படைத்திடும் இந்தப் படம் வசூலில் சீறிப்பாயும். வின் டீசல், மிஷெல் ரோட்ரிகுயூஸ், டையர் கிப்ஸ்சன் போன்ற முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் WWE நட்சத்திரம் ராக்கும் களமிறங்கி வெற்றிகளை குவித்தனர். 

இதன் 8-ம் பாகத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜேசன் ஸ்டேதமும் இணைந்து மேலும் வலு சேர்த்தார். எட்டு பாகங்களை கடந்திருக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் 9 மற்றும் 10-ம் பாகங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் ‘ஹாப்ஸ் அண்ட் ஷா’ என இதன் 9-ம் பாகத்திற்குப் பெயரிடப் பட்டுள்ளது. முந்தைய பாகத்தில் ‘ஷா’ என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்த ஸ்டேதமும், ‘ஹாப்ஸ்’ என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் ஆபிஸராக நடித்திருந்த ராக்கும் இந்த 9-வது பாகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். 

இந்தப் படபிடிப்பின் முதல்வாரம் நிறைவுற்றிருக்கும் நிலையில், ஸ்டேதமுடன் தான் இருக்கும், படத்தில் இடம்பெறும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார் ராக். இது ரசிகர்களிடையே அதிக லைக்ஸை குவித்து வருகிறது. 


newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP