எதிர்பார்ப்பை தூண்டும் 'பேட்ட'யின் புதிய போஸ்டர்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'பேட்ட' பொங்கலுக்கு வெளியாகிறது. சசிக்குமாரின் பின்னால் அமர்ந்து ரஜினி செல்வது போன்ற படத்தைக் கொண்ட பேட்ட படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
 | 

எதிர்பார்ப்பை தூண்டும் 'பேட்ட'யின் புதிய போஸ்டர்!

நடிகர் ரஜினி காந்த் தற்போது நடித்து முடித்திருக்கும் பேட்ட திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. 

நடிகர் ரஜினிகாந்தின் 165-வது படமான இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், சசிகுமார், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். 

எதிர்பார்ப்பை தூண்டும் 'பேட்ட'யின் புதிய போஸ்டர்!

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் நேற்று ரஜினியுடன் சிம்ரன் நடப்பது போன்ற ஸ்டில் வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது ஓர் பைக்கில் சசிக்குமாரின் பின்னால் அமர்ந்து ரஜினி செல்வது போன்ற படத்தைக் கொண்ட "பேட்ட" படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் படத்தில் அனைவரின் கேரக்டரையும் தெரிந்துக் கொள்ள ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP