விராட் கோலியாக நடிக்கும் துல்கர் சல்மான்

பாலிவுட் படத்தில் விராட் கோலியாக துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
 | 

விராட் கோலியாக நடிக்கும் துல்கர் சல்மான்

பாலிவுட் படத்தில் விராட் கோலியாக துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழில் ஓ... காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் துல்கர் சல்மான். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார். 

நடிகர் இம்ரான் கான் மற்றும் மித்திலா பல்கார் உடன் இவர் நடித்திருந்த 'கர்வான்' படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், அவர் தனது அடுத்த இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

தி சோயா ஃபேக்டர் என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படம் அனுஜா சவுகான் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.இந்த படத்தில் விராட் கோலி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் நாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP