‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’

தேசிய விருது கிடைக்கவில்லை என்று தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
 | 

‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’

தேசிய விருது கிடைக்கவில்லை என்று தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், “பாரம்” என்ற படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படம் விருது கிடைத்தது. இப்படன் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட பரியேறும் பெருமாள், வடசென்னை, 2.ஒ போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை. இதற்காக சில தமிழ் சினிமா கலைஞர்கள் தங்களது ஆதகங்களையும், விமர்சனத்தையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னையில் பேட்டியளித்த கவிஞர் வைரமுத்து, ‘ஒரு படத்திற்கு தேசிய விருதை விட மக்களால் பேசப்படும் விருதுதான் பெரிது; அது தமிழ் படங்களுக்கு கிடைத்துள்ளது. தேசிய விருது கிடைக்கவில்லை என்று தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம். தேசிய விருது வழங்குவதில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை; அப்படி இருந்தால் கண்டிக்கத்தக்கது’ என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP