களவாணி - 2 படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மே மாதம் திரையிடப்பட இருந்த களவாணி 2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி கோபி என்பவர் தொடர்ந்த வழக்கால், ஆறு வாரக் காலம் படத்தின் ரிலீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது நீதிமன்றம்.
 | 

களவாணி - 2 படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

"களவாணி - 2" திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய இடைக்காலத் தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’களவாணி 2’ படத்தி்ன் மூலம் விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும்,  ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர். 

களவாணி - 2 படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட, மிக வேகமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்,  இப்படத்திற்கு தடை விதிக்க கோரி, தனலட்சுமி நிறுவனம் சார்பில் கோபி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தங்களிடம் பெற்ற கடனை களவாணி 2 திரைப்படத்தின் இயக்குனரான சற்குணம் திருப்பி தரும் வரை படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க கோரப்பட்டிருந்தது,

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தை ஆறு வாரக் காலத்திற்கு ரிலீஸ் செய்யக் கூடாது என இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.   

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP