கிராம வாழ்க்கையை திரையில் சித்தரித்த இயக்குனர் இமயத்தின் பிறந்த நாள் இன்று! 

’என் இனிய தமிழ் மக்களே’ என தனது திரை உலக பயணத்தை துவங்கியவர் பாரதிராஜா. இவரின் படைப்புகள் இன்றும் தமிழ் ரசிகர்களால் நினைவு கூறத்தக்கவையாக இருக்கின்றனர். கிராம வாழ்வை திரையிட்டு காட்டிய இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பிறந்த நாள் இன்று (ஜூலை 17)
 | 

கிராம வாழ்க்கையை திரையில் சித்தரித்த இயக்குனர் இமயத்தின் பிறந்த நாள் இன்று! 

’என் இனிய தமிழ் மக்களே’ என தனது திரை உலக பயணத்தை துவங்கியவர் பாரதிராஜா. இவரின் பெரும்பாலான படங்கள் மண் மனம் மணக்கும் கிராமத்து கதைக் களமாகவே அமைந்திருந்தது.

அதோடு  அரங்கத்திற்குள் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த திரைபட பாணியை கைவிட்டு வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர் பாரதி ராஜா. இவரால் படைக்கப்பட்ட உணர்வு  நிறைந்த நாட்டுப்புற படங்கள் இன்றும் நம்மிடையே உலா வருகின்றன.

இவரிடம் உதவியாளர்களாக இருந்த பலரும் இன்று முன்னணி இயக்குனர்களாக வளம் வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பாக்யராஜ், மணிவண்ணன்,மனோபாலா,மனோஜ் குமார்,பொன்வண்ணன், சீமான் உள்ளிட்டோர்.  இயக்குனர்களை மட்டுமல்லாமல் ரதி, ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சனி, ரஞ்சிதா, உள்ளிட்ட பல முன்னணி நாயகிகளை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் பாரதிராஜா.

கிராம வாழ்க்கையை திரையில் சித்தரித்த இயக்குனர் இமயத்தின் பிறந்த நாள் இன்று! 

பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பாரதிராஜாவின் படைப்புகள் இன்றும் தமிழ் ரசிகர்களால்  நினைவு கூறத்தக்கவையாக இருக்கின்றன. கிராம வாழ்க்கையை திரையில் சித்தரித்து வெற்றிக்கொடி நாட்டிய இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பிறந்த நாள் இன்று (ஜூலை 17) 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP