கடவுளின் குழந்தை ஏ.ஆர்.ரஹ்மான் - தனுஷ் ட்வீட்!

உலகம் முழுவதும் நேற்று வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் ரஜினி காந்தின் 2.0 திரைப்படத்தைப் பாராட்டி ட்வீட் செய்திருக்கும் நடிகர் தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மானை "கடவுளின் குழந்தை" எனப் பாராட்டியுள்ளார்.
 | 

கடவுளின் குழந்தை ஏ.ஆர்.ரஹ்மான் - தனுஷ் ட்வீட்!

உலகம் முழுவதும் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் திரைப்படம் 2.0. இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இதில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 

3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 2.0 சிட்டியைக் காண, திரையரங்குகளுக்குப் படை எடுக்கிறார்கள் ரசிகர்கள். அதோடு இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில், முன்னணி நடிகரும், ரஜினியின் மருமகனான தனுஷ், "ஷங்கர் சார் தமிழ் / இந்திய சினிமாவுக்குக் கிடைத்தப் பெருமை. அக்‌ஷய் குமார் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கடவுளின் குழந்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எனது சல்யூட்" என ட்வீட் செய்திருந்தார். 

இதனை ரீ ட்வீட் செய்திருக்கும் 2.0 திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,"நன்றி தனுஷ் ஜி" எனத் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP