தனுஷுடன் ஆன் ஸ்கிரீனில் போட்டி தொடரும் - சிம்பு

"நம்முடைய போட்டி ஆன் ஸ்கிரீனில், சோஷியல் மீடியாக்களில் இல்லை. என்னுடைய ரசிகர்களிடம் தனுஷின் சிறந்த படங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என தனுஷின் வடசென்னை படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சிம்பு
 | 

தனுஷுடன் ஆன் ஸ்கிரீனில் போட்டி தொடரும் - சிம்பு

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில்  தனுஷ் நடித்திருக்கிறார்.  

ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்தத் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் சிம்பு. "என்னுடைய அன்பிற்கினிய நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு எனது குடும்பம், ஃபேன்ஸ் மற்றும் என்னுடைய சார்பாக வாழ்த்துகள். நம்முடைய போட்டி ஆன் ஸ்கிரீனில், சோஷியல் மீடியாக்களில் இல்லை. என்னுடைய ரசிகர்களிடம் தனுஷின் சிறந்த படங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷுடன் ஆன் ஸ்கிரீனில் போட்டி தொடரும் - சிம்பு

சிம்பு - தனுஷ் இருவருக்கும் தொழில் முறை போட்டிகளும், பிரச்னைகளும் நிலவி வந்த நிலையில், சமீப காலமாக இருவரும் நட்பு பாராட்டுவதை, மகிழ்ச்சியுடன் ரசிக்கிறார்கள் இருவரின் ரசிகர்கள்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP