மகள் பர்தா அணிந்து மேடையில் தோன்றிய விவகாரம்: விளக்கம் அளித்த ரஹ்மான்!

இஸ்லாமிய முறைப்படி புர்கா அணிந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா ரஹ்மான் பேசியது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதுகுறித்து அவரும், அவரது மகளும் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.
 | 

மகள் பர்தா அணிந்து மேடையில் தோன்றிய விவகாரம்: விளக்கம் அளித்த ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா ரஹ்மான், பர்தா அணிந்து மேடையில் பேசியது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து அவரும், அவரது மகளும் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.  

"ஸ்லம் டாக் மில்லினியர்" திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சமீபத்தில் அதனை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த மகள் கதிஜா கலந்து கொண்டார். விழாவின் ஒரு பகுதியாக தனது தந்தையுடன் மேடையில் கதிஜா உரையாடினார்.

அப்போது கதிஜா, தன் முகத்தைப் பர்தாவால் முழுதாக மூடியிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும், ரஹ்மான் பிற்போக்குவாதி, அவர் மகளை வற்புறுத்தி இப்படி செய்யச் சொல்லியிருக்கிறார் என பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 

அதனையடுத்து ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில், தனது இரண்டு மகள்கள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் "ஒருவருக்கு பிடித்ததை தேர்வு செய்ய அவரவருக்கு உரிமை இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கதிஜா தனது பேஸ்புக் பக்கத்தில், "நானும், அப்பாவும் மேடையில் பேசிக்கொண்டது இவ்வளவு பரவலாக பேசப்படுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் அணிந்திருந்த முகத்திரை என் தந்தையின் வற்புறுத்தலால் நடந்தது என்றும், அவர் உள் ஒன்று, புறம் ஒன்று என இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

 

நான் உடுத்தும் உடையோ அல்லது என் தோற்றமோ, நான் என் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்கோ எனது பெற்றோர்களுக்கு துளியும் தொடர்பு இல்லை. நான் முழுமையாக ஏற்று, பெருமையுடனும் சுய விருப்பத்துடன்தான் பர்தாவை அணிந்திருக்கிறேன்.

எனக்கு எது வேண்டுமென்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். எந்தவொரு தனிமனிதனுக்கும் அவர்கள் எதை அணிய வேண்டுமென்ற சுதந்திரம் இருக்கிறது. அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். விவரம் தெரியாமல் யாரையும் எடைபோடாதீர்கள்" என பதிவிட்டுள்ளார்.

தற்போது இதுவும் வைரலாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP