விவாகரத்தான நடிகர் மீது க்ரஷ்! அதிர வைத்த பிரபல நடிகை!

விவாகரத்தான நடிகர் மீது தனக்கு க்ரஷ் என பிரபல நடிகை தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 | 

விவாகரத்தான நடிகர் மீது க்ரஷ்! அதிர வைத்த பிரபல நடிகை!

சமீப காலமாக நடிகைகள் தங்களின் க்ரஷ் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அண்மையில் பரதேசி, பேராண்மை, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சாய் தன்ஷிக்கா, நடிகர் சிம்பு மீது தனக்கு க்ரஷ் உள்ளதாக கூறினார்.

அவரை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விக்கா தனக்கு நடிகர் விஜய் சேதுபதி மீது க்ரஷ் என கூறி அதிர வைத்தார். திருமணமான நடிகர் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக அவர் கூறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சுனைனா க்ரஷ் குறித்து தெரிவித்திருப்பது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

விவாகரத்தான நடிகர் மீது க்ரஷ்! அதிர வைத்த பிரபல நடிகை!

காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, வம்சம், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்தவர் சுனைனா. ட்விட்டரில், ரசிகர்  ஒருவர் சினிமாத் துறையில் உங்களின் முதல் க்ரஷ் யார்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுனைனா, பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீது தான் முதலில் கிரஷ் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கோய் மில் கயா படம் ரிலீஸான போது அந்தப் படம் தனது வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கு வகித்தது என்றும் கூறியுள்ளார்.

 

 

இதை தொடர்ந்து நெட்டிசன்கள் இப்போது யார் என கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் ரித்விக்காவே பரவாயில்லை, திருமணமானவர் மீது தான் க்ரஷ் கொண்டார். நீங்கள் விவாகரத்தானவர் மீது க்ரஷ் இருந்தது என்கிறீர்களே என்று கூறி வருகின்றனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP