கிரேஸி மோகன் மறைவு: நடிகர்கள், நாடகக் கலைஞர்கள் இரங்கல்

பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் நாடகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 | 

கிரேஸி மோகன் மறைவு:  நடிகர்கள், நாடகக் கலைஞர்கள் இரங்கல்

பிரபல  நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் நாடகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

* நடிகர் செந்தில்: கிரேஸி மோகன்  நல்ல மனிதர்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

* நடிகை கோவை சரளா: கிரேஸி மோகனின் மறைவு  நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு.

*  இயக்குநர் சரண்: தமிழ் மக்களின் இதயத்திற்கு சிரிப்பு மருந்து கொடுத்தவர் கிரேஸி மோகன். நமது இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவரின் இதயம் நின்றுபோனது.

*  நடிகர் எஸ்.வி.சேகர்: மக்கள் முகம் சுளிக்காத வகையில் வசனங்களை எழுதிய கிரேஸி மோகன், சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார்.

*  நடிகர் மோகன்ராம்: மேடை நாடக உலகிற்கு இன்றைய நாள் கருப்பு தினம்.

* நடிகர் சார்லி: கோபமாக இருந்தாலும் அதையும் நகைச்சுவையாக வெளிப்படுத்துவார்; அவரின் மூச்சுக் காற்றிலும் நகைச்சுவை இருக்கும்.

* நடிகர் மனோபாலா: தமிழ் சினிமாவில்  நகைச்சுவை வகை படங்களுக்கு பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது.

*  நடிகர் நாசர்: மிகச்சிறந்த நண்பர், மனிதரை இழந்துவிட்டேன்; அவரை சார்ந்தோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP