நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு: ராதாரவிக்கு பிரபலங்கள் கண்டனம்!

நயன்தாரா குறித்த ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 | 

நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு: ராதாரவிக்கு பிரபலங்கள் கண்டனம்!

நயன்தாராவை மோசமான வார்த்தைகளால் சித்தரித்த ராதாரவியை  கண்டித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு|ள்ளார். அதில், " கடந்த 2018ம் ஆண்டு நடிகை ஒருவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் அச்சம் காரணமாக, தனது விவரங்களை அந்த நடிகை வெளியிடவில்லை. அதன் பின்னர் சில நாள்களில் நடிகர் ராதாரவி மீடு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்" என அவர்  ராதாரவி மீதான குற்றங்களை குறிப்பிட்டுள்ளார். 

 

;

நயன்தாராவின் ஐரா படத்தை தயாரித்து வரும்  KJR ஸ்டுடியோஸ் ராதாரவிக்கு எதிரான கண்டன கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

பல சர்ச்சைகளை கிள‌ப்பி வரும் பாடகி சின்மயி, ராதாரவி குறித்து, "ஏற்கெனவே பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திலும் இதுபோலவே கேலி செய்தார். மீண்டும் பெண்களுக்கு எதிரான கிரிமினல் செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்" என ட்விட் செய்துள்ளார்

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP