90's கிட்ஸ்களுக்கான கோமாளி பட பாடல் ரிலீஸ் 

நடிகர் ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து ஒளியும் ஒலியும்'என்னும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது
 | 

90's கிட்ஸ்களுக்கான கோமாளி பட பாடல் ரிலீஸ் 

நடிகர் ஜெயம் ரவி,  பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். கோமாளி படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு  பாடல்கள்  வெளியானதைத் தொடர்ந்து, தற்போது 'ஒளியும் ஒலியும்'என்னும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் 90' கிட்ஸ் பார்த்து ரசித்து மகிழ்ந்த, இன்று மறக்கப்பட்ட பல நினைவுகளை பாடல் வரிகளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP