சென்னை: “பட்டதாரி“ நாயகன் மீது நாயகி புகார் !

பட்டதாரி திரைப்பட கதாநாயகன் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனோன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.நேரிலும் தொலைபேசியிலும் மிரட்டல் விடுவதாக புகார் அளித்துள்ளார்.
 | 

சென்னை: “பட்டதாரி“ நாயகன் மீது நாயகி புகார் !

பட்டதாரி திரைப்பட கதாநாயகன் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனோன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் 'பட்டதாரி'. இந்த படத்தின் கதாநாயகனான அபி சரவணனும், கதாநாயகி அதிதி மேனோனும் (ஆதிரா சந்தோஷ்) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் அதிதி மேனோன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் தற்போது வேறொரு தொடர்பில் இருப்பதாகவும் கூறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சென்னை: “பட்டதாரி“ நாயகன் மீது நாயகி புகார் !

இது தொடர்பாக அதிதி மேனோன் எந்த ஒரு விளக்கமும் அளிக்காதிருந்த நிலையில் இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அதிதி, அபி சரவணனுக்கும் தனக்கும் பட்டதாரி படம் மூலமே அறிமுகம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் இடையில் அபி சரவணன் தங்களது உறவை பயன்படுத்தி நன்கொடை என்ற பெயரில் பல விஷயங்களுக்கு பணம் பெற்று தனது சொந்த லாபத்திற்காக பயன்படுத்தியதை அறிந்து, அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன் முடிவில் இருவரும் பிரிய முடிவெடுத்து பிரிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

சென்னை: “பட்டதாரி“ நாயகன் மீது நாயகி புகார் !

தொடர்ந்து பேசிய அவர் சமீப காலமாக அபி சரவணன், தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாகவும், தான் அவரை ஏமாற்றி விட்டதாகவும் போலியான ஒரு திருமண சான்றிதழை உருவாக்கி தன்னை தொலைபேசி மூலமும் நேரிலும் மிரட்டி வந்ததோடு தன்னை பற்றி தவறான தகவல்களை இணையத்தில் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த போலி திருமண சான்றிதழை தனது ட்விட்டர் மற்றும் மின் அஞ்சல் கணக்குகளில் ஊடுருவியே அபி சரவணன் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருப்பது போலி சான்றிதழ் என மதுரை நீதிமன்றம் மூலம் நிரூபித்த பின்னரே தான் அவர் மீது புகார் அளிக்க வந்துள்ளதாக தெரிவித்த அதிதி, தன்னை மிரட்டுவதோடு தனது வளர்ச்சியை தடுக்கவே அபி சரவணன் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அபி சரவணன் மீது தனது கணக்குகளை முடக்கியதற்காக சைபர் கிரைமிலும், தன்னை தொலைபேசியிலும் நேரிலும் மிரட்டுவதாலும் தனிபட்ட முறையிலும் அவர் மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP