தலைவர் பைலா: நாளை வெளியாகிறது பேட்ட 2வது பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தின் 2வது சிங்கிள் டிராக்கான உல்லால்லா நாளை மாலை 6 மணிக்கு வெளியாகயிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளிணயிட்டுள்ளது.
 | 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து சிம்ரன், விஜய் சேதுபதி, த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேஹா ஆகாஷ், ராம்தாஸ், ஷனந்த் ரெட்டி, மாளவிகா மோகனன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இப்படத்தின் மரண மாஸ் என்ற சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது. உல்லால்லா என்று தொடங்கும் இந்த பாடல் பைலா வகையானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP