சென்னையில் நடுரோட்டில் பிரபல நடிகையின் செல்போன் திருட்டு!

ரேணிகுண்டா, கோ, தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சனா சிங்கின் செல்போன், பட்டப்பகலில் சென்னை அண்ணா நகரில் திருடப்பட்டது.
 | 

நேற்று அதிகாலை 6.30 மணியளவில், நடிகை சஞ்சனா சிங், சென்னை அண்ணா நகரின் சிந்தாமணி பகுதியில் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சிக்னலின் அருகே நின்று கொண்டு, தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்த அவரிடம் இருந்து மர்ம நபர் செல்போனை திருடிச் சென்றார். "நான் கூகுள் மேப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரெனெ, பைக்கில் ஹெல்மெட் போட்டுக் கொண்ட ஒரு நபர், என் செல்போனை திருடிச் சென்றான். நான் எனது சைக்கிளில் அவனை சிறிது தூரம் துரத்தினேன். என் உதவியாளரும் பின்தொடர்ந்தார். ஆனால் தப்பிவிட்டான்" என்றார் சஞ்சனா.

"செல் போன் போனால் கூட பரவாயில்லை. திரையிலகில் எனக்கு தெரிந்த பலருடைய தொலைபேசி எண்களை அதில் சேகரித்து வைத்திருந்தேன்" என்றும் அவர் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP