பிரபல நடிகை புகார் : நடிகர் மீது பாலியல் வழக்கு

பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ராவத் அளித்த புகாரின் பேரில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆதித்யா பாஞ்சோலி மீது மும்பை, வெர்சோவா போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 | 

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் "மீடூ" எனும் கோஷம் உலகெங்கும் அண்மையில் பிரபலமானது. 

அப்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர் ஆதித்யா பாஞ்சோலி தமக்கு பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார் என்று பிரபல நடிக கங்கனா ராவத், பொதுவெளியில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கூறி,கங்கனா ராவத் மீது பாஞ்சோலி மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,  கங்கனாவின்  சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆதித்யா பாஞ்சோலி மீது தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP