'தல' அஜித் படத்திற்கான முன்பதிவு தொடங்கியது!

தல அஜித் நடிப்பில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. வருகிற ஆகஸ்ட் 8 ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கான முன்பதிவு இன்று முதல் துவங்க உள்ளதாக படக்குழுவின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

'தல' அஜித் படத்திற்கான முன்பதிவு தொடங்கியது!

தல அஜித் நடிப்பில் திரைக்கு வரவுள்ள திரைப்படம்  'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத்,  இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ் ஷா.

அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 8 ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கான முன பதிவு இன்று முதல் துவங்க உள்ளதாக படக்குழுவின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP