ராம் சரணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய‌ பாலிவுட் சூப்பர் ஸ்டார்

தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகராக வலம் வரும் ராம் சரணுக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்ஷன் பிறந்த நாள் வாழ்த்து வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 | 

ராம் சரணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய‌ பாலிவுட் சூப்பர் ஸ்டார்

தெலுங்கு  சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்,  மாவீரன் திரைப்படத்தில் தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர். அதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். 

மேலும் தெலுங்கு திரை  உலகில் பிரபல நடிகராக வலம் வரும் இவருக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பிறந்த நாள் வாழ்த்து வீடியோவை  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்:  உங்களுக்கு என்ன வயது ஆகிறது? என எனக்கு தெரியாது, ஆனால் எப்பொழுதுமே நீங்கள் 18 வய‌தினர் போலவே காட்சியளிக்கிறீர்கள், என்றும் இளமையுடன் இருங்கள் என்று  கூறியுள்ள அமிதாப், இறுதியில்  ராம்சரணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெலுங்கில் கூறியுள்ளார்.  

 

இதனை தொடர்ந்து அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராம் சரண்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP