விஜய் ஆண்டனியின் படத்தை வாங்க போட்டியிடும், பாலிவுட் தயாரிப்பாளர்கள் 

’கொலைகாரன்’ படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை பெற இந்தி பட அதிபர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

விஜய் ஆண்டனியின் படத்தை வாங்க போட்டியிடும், பாலிவுட் தயாரிப்பாளர்கள் 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின், படங்களில் ஒன்று 'கொலைக்காரன் திரைப்படம்.

இதில்  ’ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூன் முக்கிய கதாப்பாத்தில்  நடித்திருந்தார். ஆண்ட்ரியு லூயிஸ் இயக்கியுள்ள  இந்த படத்தை   தியா மூவிஸ் சார்பாக ப்ரதீப் தயாரித்திருந்தார்.  கடந்த மாதம் திரைக்குவந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ’கொலைகாரன்’ படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை பெற இந்தி பட அதிபர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.  அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு இந்த படத்தின் உரிமையை கொடுக்க `கொலைகாரன்’ பட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP