ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும்  பாலிவுட்  ஹீரோயின்

தனுசு ராசி நேயர்களே திரைப்படத்தில், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின் நடிகை ரியா சக்ரபோட்டி நடிக்கவிருக்கிறார். இவரின் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த திரைப்படம் ‘ஜலேபி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 | 

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும்  பாலிவுட்  ஹீரோயின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண், இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.  அதனை தொடர்ந்து அவரது மூன்றாவது படமாக தனுசு ராசி நேயர்களே என பெயிரிடப்பட்ட படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தினை அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.  இந்த படம் குறித்த தகவலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ஹரிஷ் கல்யாண்.

இந்நிலையில், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட்  ஹீரோயின் நடிகை ரியா சக்ரபோட்டி நடிக்கவிருக்கிறார்.  இவரின் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த திரைப்படம் ‘ஜலேபி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP