கட்அவுட்டுக்கு பாலபிஷேகம்: ஏன் அவ்வாறு கூறினேன்? - நடிகர் சிம்பு விளக்கம்

கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள் என்று கூறியது ஒரு மாற்றத்திற்க்காக தான், ஒரு விஷயத்தை நெகடிவ் ஆக பேசினால் தான் மக்களிடம் சென்று சேர்கிறது என நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார்.
 | 

கட்அவுட்டுக்கு பாலபிஷேகம்: ஏன் அவ்வாறு கூறினேன்? - நடிகர் சிம்பு விளக்கம்

கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள் என்று கூறியது ஒரு மாற்றத்திற்காகத் தான், ஒரு விஷயத்தை நெகடிவ் ஆக பேசினால் தான் மக்களிடம் சென்று சேர்கிறது என நடிகர் சிம்பு தெரிவித்தார். 

நடிகர் சிம்புவின் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படம் வருகிற பிப்ரவரி 1ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிம்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், 'எனது படத்திற்கு பெரிய அளவில் பேனர்கள், கட்அவுட்கள் வைக்க வேண்டாம். பால் அபிஷேகம் செய்யாதீர்கள். அதற்கு பதிலாக அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு சட்டை எடுத்துக் கொடுங்கள்" என்று தனது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

தொடர்ந்து, அடுத்த சில தினங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில், "எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா? என்று கேட்கிறார்கள். எனக்கு ரசிகர்கள் என்று ஒரு சிலர் தான் இருப்பதாக கூறுகிறார்கள். அந்த ஒரு சில ரசிகர்களுக்கு நான் இப்போது அன்புக்கட்டளையிடுகிறேன். இது வரை நீங்கள் செய்யாத அளவுக்கு பெரிய அளவில் எனது படத்தை கொண்டாடுங்கள். பெரிய பேனர், கட்அவுட் வைத்து, பாக்கெட்டில் இல்லாமல், அண்டாவில் பாலை ஊற்றுங்கள். கொண்டாட்டம் வேற லெவலில் இருக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு ஒரு சில ரசிகர்கள் தான் இருக்கிறார்கள். அதனை இப்படி செய்வதில் எந்த தப்பும் இல்லை" என்றார்.

அவரை நன்கு புரிந்தவர்கள், அவர் விரக்தியில் தான் இவ்வாறு பேசுகிறார் என்று கூறினர். மேலும் பலதரப்பட்ட மக்களிடம் இது பலவாறாக பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "தனக்கு கட்அவுட், பேனர் எதுவும் வேண்டாம் என்று கூறிய வீடியோ மக்களை சென்றடையவில்லை. அடுத்ததாக நெகடிவ் ஆக பேசிய வீடியோ மக்களிடம் சென்று சேர்ந்தது. மக்களிடம் மாற்றத்தை உருவாக்கவே நான் இவ்வாறு பேசினேன். 

கட்அவுட் வைக்கும் போது ரசிகர் ஒருவர் கடந்த ஆண்டு மரணமடைந்த நிகழ்வு இன்னும் என்னை வருத்தடமடையச் செய்கிறது. அவரது நினைவாகவே நான் கட்அவுட், பாலபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால், அந்த வீடியோ பெருமளவில் மக்களிடம் சென்று சேரவில்லை. மேலும், எனது அந்த வீடியோவுக்கு எதிராக பலர் தங்கள் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்தனர். 

எனவே இரண்டாவது வீடியோவை வெளியிட்டேன். அதில் நான் பாக்கெட்டில் இல்லாமல், அண்டாவில் பாலை ஊற்றுங்கள் என்று தான் கூறினேன். படம் பார்க்க வரும் மக்களுக்கு அண்டாவில் பாலை கொடுங்கள் என்ற அர்த்தத்தில் பேசினேன். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்" என்றார். 

மேலும், 'தற்போது மக்களிடம் ஒரு விஷயம் சென்றடைய வேண்டும் என்றால் அதனை நெகட்டிவ் ஆக சொல்ல வேண்டும் என்று தான் நான் நினைக்கிறன். ஊடக நண்பர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாக தான் இருந்தீர்கள். ஒரு நல்ல விஷயத்தை யார் சொன்னாலும் அதை கொண்டுபோய் சேருங்கள். அதன்பின்னர் அதன் மீது நீங்கள் விவாதம் நடத்துங்கள். மற்ற நடிகர்களிடம் கேட்காத கேள்வி கூட என்னிடம் கேட்டுள்ளீர்கள். அதற்கும் நான் பொறுமையாக பதிலளித்திருக்கிறேன். மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று தான் அப்படி கிண்டலாக பேசினேன்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தையை நான் மறப்பவன் அல்ல. நான் பேசியதை விவாதத்திற்குரிய ஒரு பொருளாக மாற்ற நினைக்கிறார்கள். என்னை யார் செய்தாலும் உண்மை ஜெயிக்கும். இப்போதும் சொல்கிறேன். எனக்கு ரசிகர்களின் அன்பு மட்டும் போதும்" என்று பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP