மீண்டும் பழைய அனுஷ்கா: வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை அனுஷ்கா உடல் எடையை வெகுவாகக் குறைத்து தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

மீண்டும் பழைய அனுஷ்கா: வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை அனுஷ்கா உடல் எடையை அதிகமாக குறைத்து தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்து நடித்தார். அந்த திரைப்படம் பெரும் அளவில் வெற்றியடையவில்லை. அதன் பிறகு நடத்த பாகுபலி படத்திற்காக உடல் எடையை சிறிது குறைத்தார். ஆனால் அவரால் பழைய அனுஷ்காவாக அவர் இல்லை என்ற பேச்சுகள் தொடர்ந்து இருந்து வந்தன. 

இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் சமீபத்தில் அவர் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும் இதனை அவரது ரசிகர்கள் அதிகமாக பரப்பி வருகின்றனர். 

அனுஷ்கா இன்னும் அழகாக... வைரல் புகைப்படங்கள்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP