விஜய்யுடன் இணையும் அருண் விஜய்?

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது இயக்குநர் நவீன் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் செக்க சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து, முக்கிய வேடத்தில் நடிகர் அருண் விஜய்யும் நடிக்கிறாராம்.
 | 

விஜய்யுடன் இணையும் அருண் விஜய்?

இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் விஜய் ஆண்டனி. கடைசியாக கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கியிருந்த 'காளி' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இப்போது கணேஷாவின் ‘திமிரு புடிச்சவன்’, ஆண்ட்ரு லூயிஸின் ‘கொலைகாரன்’ மற்றும் இயக்குநர் நவீன் இயக்கும் பெயரிடப் படாதப் படம் ஆகியவற்றில் பிஸியாக இருக்கிறார். இதில் நவீன் இயக்கும் திரைப்படம் ஆக்‌ஷன் - த்ரில்லராக உருவாகிறதாம். 

இதனை ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கிறாராம். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ பட நடிகை ஷாலினி பாண்டே நடிக்க இருக்கிறாராம். இன்னும் பெயரிடப் படாத இந்தப் படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப் பட்டது. தொடர்ந்து இதன் ப்ரீ - ப்ரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 

இந்நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்பைப் பலரும் பாராட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது. இந்தத் திரைப்படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. 
 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP