பாக்ஸராகும் அருண் விஜய்!

செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்குப் பிறகு அடுத்தப் படத்திற்கு தயாராகி விட்டார் நடிகர் அருண் விஜய். அந்தப் படத்திற்கு 'பாக்ஸர்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார் அவர்.
 | 

பாக்ஸராகும் அருண் விஜய்!

இயக்குநர் கெளதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய்யின் கரியர் கிராஃப் ஏறியது. விக்டர் கதாபாத்தில் நடித்த அவருக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்தனர். சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார் அருண் விஜய்.

இந்நிலையில் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அருண். பாக்ஸர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள, இந்தப் படத்தை விவேக் என்பவர் இயக்குகிறார். எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இதனைத் தயாரிக்கிறார்.

அருண் விஜய்யின் 27-வது படமான இதனை, அவரே தனது ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.  அதோடு படத்தின் டைட்டில் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP