என் நிறத்தை பார்த்து விமர்சித்தனர்: கதறி அழுத அருண் பாண்டியனின் மகள்

பத்திரிக்கையளர்களை சந்தித்த கீர்த்தி பாண்டியன், இயக்குனர்களில் பலர் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்து குறை கூறி தன்னை நிராகரித்த நிலையில், தும்பா பட இயக்குனர் ஹரிஸ் கல்யாண் மட்டுமே, தன் திறமைக்கு மதிப்பளித்து, படத்தில் நடிக்க முதல் வாய்ப்பு கொடுத்துள்ளார் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
 | 

  என் நிறத்தை பார்த்து விமர்சித்தனர்: கதறி அழுத அருண் பாண்டியனின் மகள்

KJR ஸ்டியோஸ் தயாரிக்கும் தும்பா திரைப்படத்தில்  பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக அறிமுகமாகிறார். இதில்   'கனா' திரைப்படம் மூலம் அறிமுகமான தர்ஷன் நாயகனாக நடித்துள்ளார். வருகிற ஜூன் 21ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் தும்பா படக்குழு பத்திரிக்கையளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கீர்த்தி பாண்டியன்:  முன்னர் பலமுறை  டெஸ்ட் ஷூட்டில் தான் கலந்து கொண்டதாகவும், அந்த இயக்குனர்களில் பலர் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்து குறை கூறி தன்னை நிராகரித்த நிலையில், தும்பா பட இயக்குனர்  ஹரிஸ் கல்யாண் மட்டுமே, தனது திறமைக்கு மதிப்பளித்து, படத்தில் நடிக்க  முதல் வாய்ப்பு கொடுத்துள்ளார் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ஒரு காலகட்டத்தில் மிக பிரபலமான நாயகனாக இருந்தவர் அருண் பாண்டியன். இவரின் மகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது மட்டுமின்றி நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து அசிங்கபடுத்தப்பட்டார் என்பது திரை உலகில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP