ஆயுதம் ஏந்தும் மாணவர்கள் மரம் வளர்க்க முயல வேண்டும்: நடிகர் விவேக்

மாணவர்கள் கத்தி, அரிவாள்கள் போன்ற ஆயுதங்கள் ஏந்துவதை விட்டு விட்டு மரம் வளர்க்க முயல வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 | 

சென்னையில், ரூட் தல பிரச்சனை காரணமாக பொதுமக்கள் மத்தியில் மாணவர்கள்  ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியால் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விவேக், " கத்தி, அரிவாள்கள் போன்ற ஆயுதங்களை ஏந்தும் மாணவர்கள் மரம் வளர்க்க, நீர்நிலைகளை பாதுகாக்க முயல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும், மாணவர்களும், இளைஞர்களும் இச்செயலில் ஈடுபட்டால், நிச்சயம் புரட்சி ஏற்பட்டு தமிழகம் பசுமையாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP