மீண்டும் இளம் இயக்குநருக்கு வாய்ப்பளித்த அரவிந்த்சாமி

கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்திலும் அரவிந்த்சாமியே ஹீரோவாக நடிக்கிறாராம். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரான் யோஹான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
 | 

மீண்டும் இளம் இயக்குநருக்கு வாய்ப்பளித்த அரவிந்த்சாமி

‘துருவங்கள் பதினாறு' படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் ‘நரகாசூரன்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனையடுத்து ‘நாடக மேடை' என்ற படத்தை இயக்குகிறார் கார்த்திக். இந்நிலையில் மற்றொரு புதிய படத்தை இயக்க கார்த்திக் நரேன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் படத்திலும் அரவிந்த்சாமியே ஹீரோவாக நடிக்கிறாராம். இதனை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரான் யோஹான் இசையமைக்கும் இந்தப் பெயரிடப்படாத படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in
 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP