செக்க சிவந்த வானம்: அரவிந்த் சாமி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

செக்க சிவந்த வானம் : அரவிந்த் சாமி ஃபர்ஸ்ட் லுக்
 | 

செக்க சிவந்த வானம்: அரவிந்த் சாமி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'செக்க சிவந்த வானம்' படத்தின் நாயகர்களின் கேரக்டர் லுக் போஸ்டர்கள் இன்று முதல் வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அரவிந்த் சாமியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

அரவிந்த் சாமி வரதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இந்த போஸ்டர் மூலம் தெரியவருகிறது. இவரது வேடம் மொரட்டுத்தனமாக இருக்கும் ஒரு நபரை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் உள்ள இவரது கோபமான முகத்திற்கு பின்னணியில் உள்ள காரணத்தை படம் பார்த்து தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

மேலும் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் இவர்களின் ஃபர்ஸ்ட் லுக் அடுத்த மூன்று நாட்களில் ஒவ்வொரு லுக்காக வெளியாக உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 28ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP