அனுஷ்கா - ஸ்ருதி ஹாசனின் பெருமை மிகு தருணம்!

நடிகைகள் அனுஷ்காவும், ஸ்ருதி ஹாசனும் இயக்குநர் ஹரியின் சிங்கம் 3 படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இவர்கள் தற்போது, "டீச் எய்ட்ஸ்" தொண்டு நிறுவனத்தின் அம்பாஸிடர்களாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.
 | 

அனுஷ்கா - ஸ்ருதி ஹாசனின் பெருமை மிகு தருணம்!

நடிகைகள் அனுஷ்காவும், ஸ்ருதி ஹாசனும் இயக்குநர் ஹரியின் சிங்கம் 3 படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் 'டீச் எய்ட்ஸ்' என்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு தொண்டு நிறுவனத்தின் அம்பாஸிடர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

எய்ட்ஸ் விழிப்புணர்வு வாரம் தொடங்கியிருக்கும் இன்று, அனுஷ்கா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு அனிமேஷன் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. இதில் அனுஷ்கா மருத்துவராகவும், ஸ்ருதி சந்தேகம் கேட்கும் பொது மனிதராகவும் பங்கெடுத்துள்ளனர். இதனை டீச் எய்ட்ஸ் மற்றும் ஸ்ருதி ஹாசன் அவர்களது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளனர். 

அனுஷ்கா தற்போது எந்த படங்களிலும் நடிக்காமல், உடல் எடையை குறைத்து வருகிறார். கமல் ஹாசனின் சபாஷ் நாயுடு, மகேஷ் மஞ்ரேக்கரின் பெயரிடப்படாத படம் ஆகியவை ஸ்ருதி ஹாசனின் கை வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP