மீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்

இன்னும் ஒருவரின் பெயர் வெளிவரும் போல் தெரிகிறது, பார்ப்போம். நல்ல வழிக்காட்டுதல் தேவை. அதோடு வேலை செய்யும் இடத்தை பாதுகாப்பாக மாற்ற வேண்டும், என யாரையோ மனதில் வைத்து பதிவிட்டிருக்கிறார் நடிகர் சித்தார்த்
 | 

மீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்

தீயாய் பற்றி எரிகிறது மீ டூ இயக்கம். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் மீ டூ என்ற ஹேஷ் டேக்கில் அந்த சம்பவத்தையும், அதற்கு காரணமானவர்களையும் அடையாளம் காட்டி வருகிறார்கள். 

சாதாரண மனிதர்களை விட பிரபலங்கள் பலரும் சிக்குவது தான் இதில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. தமிழக மீ டூ - வில் கூட கவிஞர் வைரமுத்து, பாடகர் கார்த்திக், கர்நாடக இசை பாடகர் ஓ.எஸ்.தியாகராஜன் உட்பட பலர் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளனர். 

மீ டூ -வு க்கு ஆதரவளித்து வரும் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டரில் பதிவொன்றைப் போட்டுள்ளார். அதில், "இன்னும் ஒருவரின் பெயர் வெளிவரும் போல் தெரிகிறது, பார்ப்போம். நல்ல வழிக்காட்டுதல் தேவை. அதோடு வேலை செய்யும் இடத்தை பாதுகாப்பாக மாற்ற வேண்டும்" எனக் கூறியிருக்கிறார். 

இதை வைத்துப் பார்க்கும்போது, யாரையோ அவர் மனதில் வைத்து சொல்வது போல் தெரிகிறது.   

newstm.in 
 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP