'அமெரிக்கா என் மாமியார் வீடு' : மாஸ் என்ட்ரி கொடுக்கும் யோகிபாபு!

"கூர்கா" திரைப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் போட்டியில் வெற்றி பெரும் யோகிபாபு, எதிர் போட்டியாளரான அமெரிக்கருடன் வெற்றி கோப்பையை பகிர்ந்து கொள்ளும் மாஸ் காட்சி இடம் பெற்றுள்ளது.
 | 

'அமெரிக்கா என் மாமியார் வீடு' : மாஸ் என்ட்ரி கொடுக்கும் யோகிபாபு!

டார்லிங் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கூர்கா ஆகும்.

இந்தத் திரைப்படத்தில் கனடாவை சேர்ந்த  மாடல் அழகி எலிஸா என்பவர் நாயகியாக நடித்துள்ளார்.

4 மங்கி ஸ்டூடியோ தயாரித்துள்ள  இதில் ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன்,  மயில்சாமி,   தேவதர்ஷினி   மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வர உள்ள கூர்கா திரைப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில்  ’போட்டியில் வெற்றி பெரும் யோகிபாபு, எதிர் போட்டியாளரான அமெரிக்கருடன் வெற்றிக் கோப்பையை பகிர்ந்து கொள்ளும் மாஸ் காட்சி’ இடம் பெற்றுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP