இந்தியாவின் தேசத் தந்தை அம்பேத்கர் தான் : பா.ரஞ்சித்

காந்தியை விட தேசத்தின் நன்மைக்காக அதிகம் சிந்தித்தவர் அம்பேத்கர் தான் என்றும் இனி இந்தியாவின் தேசத் தந்தை என்று அம்பேத்கரை தான் குறிப்பிட வேண்டும் என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
 | 

இந்தியாவின் தேசத் தந்தை அம்பேத்கர் தான் : பா.ரஞ்சித்

காந்தியை விட தேசத்தின் நன்மைக்காக அதிகம் சிந்தித்தவர் அம்பேத்கர் தான் என்றும் இனி இந்தியாவின் தேசத் தந்தை என்று அம்பேத்கரை தான் குறிப்பிட வேண்டும் என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். 

அம்பேத்கரின் 62வது நினைவு நாள் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் ரஞ்சித் பங்கேற்று பேசினார். அப்போது அவர், "ஜெய் பீம் என்ற முழக்கமிடும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு உரத்த குரல் கொடுத்து வருகிறேன்.

காந்தியை விட தேசத்தின் நன்மைக்காக அதிகம் சிந்தித்தவர் அம்பேத்கர். இனி இந்தியாவின் தேசத் தந்தை என்று அம்பேத்கரை தான் குறிப்பிட வேண்டும். பெரும் பணக்காரர்கள், பட்டா வைத்திருப்பவர்கள், பட்டம் பெற்றவர்களிடம் மட்டுமே இருந்த ஓட்டு உரிமையை சேரி மக்களுக்கும் பெற்று தந்தவர் அம்பேத்கர். அதன் காரணமாகத் தான் வாக்கு கேட்பதற்காகவாவது சேரிக்குள் கால் வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

தனித் தொகுதியில் நின்று வாக்கு பெற்று சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்பவர்கள், பட்டியலின மக்களுக்கு ஏதும் செய்வதில்லை. இனியாவது வாக்களித்தவர்களுக்கு திரும்ப செய்யுங்கள். இல்லையென்றால் கட்சியை விட்டு வெளியே வாருங்கள்.

இனியும் யாராவது ஒருவர், பட்டியலின கட்சியை சாராமல் வேறு கட்சியில் இருந்து, தனித் தொகுதியில் போட்டி இட்டால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். ஆணவப் படுகொலைகள் நிகழும்போதெல்லாம் பட்டியலினத்தை சார்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ குரல் கொடுப்பதில்லை. அவர்கள் சார்ந்துள்ள கட்சி அவர்களை தடுக்கிறது.

எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 7 தனித்தொகுதிகளுக்கு, அனைத்து பட்டியலின கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் " என்றார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP