'ஆடை' டீசரை விட ட்ரைலரில் வித்யாசம் காட்டியுள்ள அமலாபால்!

ஆடை படத்தின் டீசர் அதிக கவர்ச்சி சீன்களை கொண்டதாக இருந்து வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
 | 

'ஆடை' டீசரை விட ட்ரைலரில் வித்யாசம் காட்டியுள்ள அமலாபால்!

இயக்குனர் ஏ. எல்.விஜயுடனான விவாகரத்து  பெற்றதற்கு பின்னர் அமலாபால் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையான ”ஆடை” என்கிற படத்தில் நடித்துள்ளார் அமலாபால்.

இந்த திரைப்படத்தை 'மேயாத மான்'  படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். அதோடு  'வி ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு  தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.  இந்த படத்தில் அதிகப்படியான கவர்ச்சி மற்றும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

இதனிடையே வெளிவந்த ஆடை படத்தின் டீசர்  அதிக கவர்ச்சி சீன்களை கொண்டதாக இருந்து வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.  பெட் கட்டும் பழக்கத்தால் மாட்டிக்கொள்ளும் அமலாபால் சந்திக்கும் சிக்கல்கள் குறித்த படமாக இது இருக்கும் என தெரிகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP