மீண்டும் சர்ச்சைக்குரிய கதையை தேர்ந்தெடுத்துள்ள அமலாபால்

இந்தி வெப்சீரிசாக வெளியாகி பலத்த எதிர்ப்பிற்கு ஆளான லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் வெப்சீரிஸை தெலுங்கில் திரைப்படமாக உருவாக்க உள்ளதாகவும். இந்த படத்தில் ஒரிஜினல் சீரிஸில் அதிக விமர்சனங்களை பெற்ற கியாரா அத்வானி நடித்த கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
 | 

மீண்டும் சர்ச்சைக்குரிய கதையை தேர்ந்தெடுத்துள்ள அமலாபால்

 ஏ எல் விஜயுடனான திருமண பந்த முறிவிற்கு பிறகு அமலாபால் தனக்கென ஒரு தனிப்  பாதையை வகுத்து, த்ரில்லான வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்றே சொல்லலாம். இதனால் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளார் அமலாபால் .

 அந்த வகையில் அமலாபாலை பலவிமர்சனங்களுக்கு உள்ளாக்கிய படம் தான் ஆடை.  சமீபத்தில் வெளியான இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்ததால் பலரின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளானாலும் நல்ல நடிப்பிற்கான பாராட்டையும் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்தி  வெப்சீரிசாக வெளியாகி பலத்த எதிர்ப்பிற்கு ஆளான லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் வெப்சீரிஸை  தெலுங்கில்  திரைப்படமாக உருவாக்க உள்ளதாகவும்.  ஓ பேபி படத்தை இயக்கிய  நந்தினி ரெட்டி இயக்கும் இந்த படத்தில் ஒரிஜினல் சீரிஸில்  அதிக விமர்சனங்களை பெற்ற கியாரா அத்வானி நடித்த கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP